ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே திருமண அழைப்பிதழ் வைத்து விட்டு காரில் திரும்பிய மாப்பிள்ளை கால்வாய்க்குள் கார் கவிழ்ந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். உடுமலை அண்ணா குடியிருப்பை சேர்ந்த அதிமுக பிரமுகர் சிவராஜின் மகன் கோகுல்நாத் என்பவருக்கு வரும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெற இருந்தது. உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் வைத்துவிட்டு ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதி வழியாக கோகுல்நாத் காரில் மீண்டும் வீடு திரும்பி உள்ளார். அப்போது கட்டுபாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி அருகிலிருந்த கால்வாயில் தலைகுப்புற கவிழ்ந்ததில் காரின் அடியில் சிக்கிய கோகுல்நாத் உயிரிழந்தார்.