திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் அடுத்தடுத்து ஐந்து பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி விபரீத முடிவு எடுக்க முயன்றவர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். நில அபகரிப்பு உள்ளிட்ட பல புகார்களுக்கு பல முறை மனு அளித்தும் வருடக்கணக்கில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் காக்க வைப்பதாக குற்றம்சாட்டி, ஐந்து பேரும் தீக்குளிக்க முயன்றனர்.