தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் உள்ள கிரின் பார்க் பள்ளி நிர்வாகம் பங்குதாரர்களிடம் வாங்கிய 12 கோடியே 23 லட்சம் ரூபாயை மோசடி செய்த வழக்கில் வட்டார கல்வி அலுவலர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.தருமபுரி மாவட்டம் கடத்தூரில் உள்ள கிரின் பார்க் பள்ளி நிர்வாகம் பங்குதாரர்களிடம் வாங்கிய 12 கோடியே 23 லட்சம் ரூபாயை மோசடி செய்த வழக்கில் வட்டார கல்வி அலுவலர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த 2016ஆம் ஆண்டு பள்ளியை துவங்கும் போது 100 பேரிடம் பங்குத்தொகையாக 12 கோடியே 23 லட்சம் ரூபாயை நிர்வாகம் வசூலித்தது. இந்நிலையில் பங்குத்தாரர்களுக்கு கடந்த 7 வருடங்களாக முதலீட்டிற்கான லாபம் மற்றும் ஈவுத்தொகையை வழங்காமல் பள்ளி நிர்வாகம் இருந்ததாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் இடைத்தரகர்களாக செயல்பட்ட அலங்காயம் வட்டார கல்வி அலுவலர் சித்ரா, அவரது கணவர் செல்வம், ஓய்வு பெற்ற ஆசிரியர் சம்பத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.