நீலகிரி மாவட்டம் உதகையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் 127 ஆவது மலர்கண்காட்சி வியாழக்கிழமையன்று தொடங்க உள்ள நிலையில், 10 லட்சம் வண்ண மலர்களை கொண்டு அரண்மனை உள்ளிட்ட வடிவங்களை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோடை விழாவையொட்டி, தாவரவியல் பூங்காவில் 11 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமையன்று தொடங்கி வைக்கிறார். இதனையொட்டி, பழங்கால அரண்மனை, யானை உள்ளிட்ட வடிவங்களை வண்ண மலர்களால் அமைக்கும் பணியினை பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.