மயிலாடுதுறை நகராட்சி ஒன்றாவது வார்டில் எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாமல் திறந்த வெளியாக உள்ள மயானத்தை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மயானத்திற்கு செல்லும் பாதை சேறும் சகதியுமாக உள்ள நிலையில், உடல்களை தகனம் செய்ய கொண்டு செல்பவர்களே தங்களது சொந்த செலவில், பாதையை சீரமைக்க வேண்டி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், இறைச்சி கழிவுகளையும் இங்கு கொட்டுவதால் துர்நாற்றம் வீசி சுகாதாரக்கேடு ஏற்படுவதாகவும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.