மேட்டூர் அருகே சாணாரப்பட்டி பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அரசு மது கடையை அகற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே நங்கவள்ளி ஊராட்சி சாணாரப்பட்டி பஞ்சாயத்தில், கிராம சபைக் கூட்டம், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமா முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தானபதியூர், மூலக்காடு, மசக்காலியூர், சப்பாணிப்பட்டி ஆகிய பகுதியில் உள்ள பொது மக்கள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் . இந்த கூட்டத்தில் சாணாரப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மதுகடையை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற, நங்கவள்ளி ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.