திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் படத்துடன் பட்டம் பெற்ற மாணவனால் பரபரப்பு ஏற்பட்டது. கே.சிங்காரக்கோட்டையில் உள்ள பிவிபி கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பி.பி.ஏ. முடித்த ஆத்தூர் பெரும்பாறையை சேர்ந்த ஈஸ்வரபாண்டியன், பிரபாகரனின் படத்துடன் பட்டம் பெற்றார்.