கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்ரோடு பகுதியில் சென்ற அரசுப் பேருந்தில், பள்ளி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்ட நிலையில் அதை வீடியோ எடுத்த பேருந்து நடத்துநரை மிரட்டிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. மாணவர்களின் ரகளையைத் தொடர்ந்து, பேருந்து நடத்துநர் குமார் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.