தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி, தனது கைகள் மீது 15 முறை கார்களை ஏற்றி உலக சாதனை படைத்துள்ளார். பட்டுக்கோட்டையை சேர்ந்த ராஜேந்திரன் - அன்பரசி தம்பதியின் 16 வயது மகள் சுசிஷாலினியை கவுரவித்து, உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.