வடகிழக்கு பருவமழை எந்த ரூபத்தில் வந்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அணைக்கு அருகிலேயே பூங்கா அமைக்க அரசு 10 கோடி ரூபாய் ஒதுக்கி, அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றார்.