தென்காசி மாவட்டம் கடையத்தில் உள்ள பாரதியார் சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு ஆர்.என். ரவி இரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனை தொடர்ந்து கடையத்திற்கு மனைவியுடன் சென்ற அவர், அங்குள்ள பாரதியார் செல்லம்மாள் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தியதை அடுத்து, அவருக்கு அங்குள் நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கினர்.