தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் சங்கரநாராயண கோவிலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். வாய்ஸ் ஆஃப் தென்காசி ஃபவுண்டேஷன் மற்றும் ராஜபாளையம் ரோட்டரி சங்கம் சார்பில், மது இல்லா தென்காசி மாவட்டம் என்ற பெயரில் மது ஒழிப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி சங்கரன்கோவிலுக்கு வருகை தந்தார். அப்போது சங்கரநாராயண கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கோவில் அதிகாரிகள் மேள தாளத்துடன் வரவேற்பு அளித்தனர்.