மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ள நிலையில் ஆளுநருக்கு மனமாற்றம் வந்துள்ளதாகவும் அவர் இப்படியே இருந்தால் நன்றாக இருக்கும் எனவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார்.