மாநாட்டில் கலந்துக்கொள்ள கூடாது என துணைவேந்தர்களுக்கு போலீஸ் மூலம் தமிழக அரசு மிரட்டல் விடுத்ததாக, ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு புகார் கூறியுள்ளார். துணை வேந்தர்கள் மாநாட்டில் பேசிய அவர், நள்ளிரவில் துணைவேந்தர்களின் வீட்டின் கதவை தட்டி மாநாட்டில் பங்கேற்றால் வீடு திரும்ப முடியாது என மிரட்டல் விடுக்கப்பட்டதாக பகீர் புகார் கூறினார்.