ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது சர்ச்சையான நிலையில், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அப்பாடலை ஆளுநர் முழுமையாக உச்சரித்து பாடினார். பின்னர், தொலைநிலையில் கல்வி பயின்ற 384 மாணவர்களுடன் சேர்த்து மொத்தம் 1052 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.