தமிழ்நாடு அரசு நான்கு ஆண்டுகளாக, தமிழக ஆளுநர் ஆர்என்.ரவியுடன் தான் போராடி கொண்டிருக்கிறது என ஆளுநர் விமர்சனத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், ஆளுநர் ஆர்என்.ரவி, எடப்பாடி பழனிச்சாமியை போல் எல்லோரும் இருப்பார்கள் என நினைத்துக் கொண்டிருப்பதாகவும், திமுக இருக்கும் வரை பாசிச அநீதிக்கு எதிராக தொடர்ந்து போராடிக் கொண்டு தான் இருக்கும் என்றும் கூறினார்.