மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் சின்ன உடைப்பு கிராம மக்களை அச்சுறுத்தக்கூடாது என அரசுக்கு அதிமுக எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா வலியுறுத்தியுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார்.