நாமக்கல் மாவட்டம் பெருமாபட்டியில் போக்சோ வழக்கில் கைதான ஆசிரியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசு பள்ளியில் பணியாற்றிய செல்வக்குமார் என்ற ஆசிரியர் கடந்த 10-ந் தேதி மாணவியிடம் பாலியல் ரீதியாக அருவருப்பான வார்த்தைகளை பேசியுள்ளார். இதனையடுத்து செல்வக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.