தென்காசி மாவட்டம் வேலாயுதபுரம் பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் பிரான்சிஸ் 10 ஆம் வகுப்பு மாணவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் போக்சோ வழக்கில் ஆசிரியரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.