கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், சாலையில் ஒருவரை ஒருவர் ரத்தம் வரும் அளவிற்கு கொடூரமாக அடித்துக்கொண்டு சண்டையிட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகிலேயே சீருடையில் 2 பேரும், சீருடை இல்லாமல் 2 பேரும் ஒருவரை ஒருவர் கொடூரமாக தாக்கிக்கொண்டனர். இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், ஒரு சிலர் சென்று சண்டையிட்டவர்களை விலக்கினர். பொது இடங்களில் இவ்வாறு ஒழுக்கமற்ற வகையில் நடந்துகொண்ட மாணவர்கள் மீது பள்ளி நிர்வாகமும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.