திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே 10ஆம் வகுப்பு மாணவனை தாக்கிய அரசுப் பள்ளித் தலைமையாசிரியரை போலீசார் கைது செய்தனர். பாப்பாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஜெகன் வகுப்பறையை சுத்தம் செய்தபோது, தலைமையாசிரியரின் கார் மீது தவறுதலாக துடைப்பம் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்து தலைமையாசிரியர் சந்திரமோகன் தாக்கியதில், மாணவனின் கை எலும்பு ஜவ்வு பாதிக்கப்பட்டதோடு, உடலின் பல்வேறு இடங்களிலும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து மாணவனின் தந்தை அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமையாசிரியரை கைது செய்தனர்.