வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த வெங்கண்ணபாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உள்ள கட்டடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அவற்றை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.