கரூர் வெண்ணமலை பகுதியில் உள்ள கோவில் நிலத்தில் அரசுக்கு சொந்தமானது எனக்கூறி பதாகைகளை வைக்க முயன்றதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி உள்ளிட்ட கோவிலுக்கு சொந்தமான இடங்களை காலி செய்யுமாறு அங்கு குடியிருக்கும் மக்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.