மதுரை திருமங்கலத்தில் ஒன்றரை வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய தைல டப்பாவை அரசு மருத்துவர்கள் சாதுர்யமாக அகற்றி உயிரை காப்பாற்றினர். கப்பலூர் பகுதியை சேர்ந்த விவேக் - சாந்தி தம்பதியின் ஒன்றரை வயது பெண் குழந்தை அஸ்விகா, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, தவறுதலாக தைல டப்பாவை விழுங்கி விட்டது. இது தொண்டைக்குள் சிக்கிக் கொண்டதால் வலி தாங்க முடியாமல் கதறிய குழந்தையை, பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து, குழந்தையை ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு சென்று மயக்க மருந்து கொடுத்து தைல டப்பாவை வெளியே எடுத்தனர்.