வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்கள் மருத்துவம் பார்க்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பெண்கள் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் எலிகளின் கூடாரமாக விளங்கும் மருத்துவமனையில் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர்.