திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சாலையில் குறுக்கே சென்ற ஆடுகள் மீது மோதாமல் இருக்க பிரேக் அடித்த போது அரசு பேருந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் சிக்கியது. இதில் 8 பயணிகள் காயமடைந்த நிலையில், கிரேன் உதவியுடன் பேருந்து மீட்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.