கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அரசுப் பேருந்தும், சுற்றுலா வேனும் பக்கவாட்டில் உரசிக் கொண்டதில் 2 பேர் காயமடைந்தனர். திருக்கோவிலூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், எலவனாசூர்கோட்டை நோக்கிச் சென்ற சுற்றுலா வேனும் பக்கவாட்டில் உரசிக் கொண்டன. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 2 பேர் படுகாயமடைந்தனர்.