தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் மூன்று பெண்கள் காயமடைந்தனர். கோவில்பட்டியில் இருந்து போரிலோவன்பட்டி நோக்கி சென்ற அரசுப் பேருந்து வீரப்பட்டி அருகே சென்றபோது, பேருந்தின் முன்பகுதியின் அடிப்பகுதியில் இருந்த பட்டையில் நட்டு, போல்டுகள் கழன்று விழுந்து, கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.