கள்ளக்குறிச்சியில் முன்பக்க கண்ணாடி இன்றி ஆபத்தான முறையில் அரசுப்பேருந்து இயக்கப்படுவதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். கூத்தக்குடி கிராமம் வரை செல்லும் தடம் எண் 321 என்ற பேருந்தை சீரமைக்கும் வரை, மாற்று பேருந்தை இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.