திருப்பத்தூரில் இருந்து பிரான்மலை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து முகப்பு விளக்கு எரியாமல் இரவு 7.30 மணியளவில் நடுரோட்டில் நின்றதால் பயணிகள், அவ்வழியாக சென்ற தனியார் பேருந்தில் ஏறி சென்றனர். பேருந்து நடுரோட்டில் பழுதாகி நின்றதால் ஆத்திரமடைந்த பயணிகள் முடிந்தால் சரி செய்து எடுத்து வாருங்கள், இல்லையென்றால் கண்மாய்க்குள் தள்ளிவிட்டு வாருங்கள் என தெரிவித்தனர்.