நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே முன் பக்க டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, எதிரே வந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்த நிலையில், 15 பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.