தேனி மாவட்டம் கருக்கோடை அருகே உள்ள பைந்தமிழ் அடுக்குமாடி குடியிருப்பு பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சென்றதால் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.கருக்கோடை அருகே அரசு நகர் புற வாழ்வு மேம்பாட்டு சார்பில் கட்டப்பட்ட பைந்தமிழ் குடியிருப்பில் சுமார் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றன.இந்நிலையில் பைந்தமிழ் குடியிருப்பு அருகே உள்ள அரசு அனுமதி பெற்ற பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்காமல் செல்வதாகவும், பெண்களை அவதூறாக பேசுவதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.