சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மலை சாலையில் சென்ற அரசு பேருந்து ஒன்று, சாலையோரத்தில் உள்ள 10 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பைத்தூர் வழியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று வானவரம் மலை கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. கல்லுக்கட்டு என்ற இடத்தில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள 10 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயனம் செய்த பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில்,அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.