தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மின்கம்பத்தின் மீது மோதியதை தொடர்ந்து 5 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். ஜெயங்கொண்டத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இந்த மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.