கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே அரசு பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் உள்பட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். மேல்மிடாலம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த ஆட்டோவின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது.