திருப்பத்தூர் அருகே கோவில் இடத்தில் அரசு கட்டடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், பள்ளிகூடம் மட்டும் அமைக்க வேண்டும் வேறு கட்டடங்கள் கட்டக்கூடாது என கூறி கிராம மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். புலிகுட்டை கிராமத்தில் சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள பல்வேறு திட்டங்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார். திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட இடம் கோவிலுக்கு சொந்தமான இடம் எனக்கூறி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திருப்பத்தூர் சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.