சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள அரசு ஆதி திராவிடர் உண்டு உறைவிட பள்ளியை, வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள இப்பள்ளியில், கல்வராயன் மலை, வெள்ளிமலை போன்ற இடங்களில் இருந்து 320 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியை இடம் மாற்ற சேலம் காரிப்பட்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டு வாகனத்தில் பொருட்களை ஏற்ற ஏற்பாடு நடைபெற்றது. இதனை அறிந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையும் படியுங்கள் : காண்டூர் கால்வாயில் தவறி விழுந்த யானை... யானையின் உடலை மீட்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்