கேரளா உள்ளிட்ட மேற்கு கடற்கரையோர பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதையொட்டி தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் 3 கோடி ரூபாய் அளவிற்கு மீன்களின் விற்பனை நடைபெற்றது. தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் ஓரளவு மீன்களுடன் கரை திரும்பிய நிலையிலும் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்தது. சீலா மீன் கிலோ 900 ரூபாய்க்கும்,ஊளி மீன் ஒரு கூடை 7 ஆயிரம் ரூபாய் வரையும் பாறை வகை மீன்கள் 4 ஆயிரத்து 800 ரூபாய் முதல் 5ஆயிரத்து 500 வரையும் விற்பனையானதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இதையும் படியுங்கள் : வேட்டியம்பட்டியில் முதன் முறையாக எருது விடும் விழா... 300 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு