மதுரை மாவட்டம் மேலூர் அருகே மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டியில் தங்கம் வென்ற வீரருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சருகு வலையப்பட்டியை சேர்ந்த பிரதீப், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த போட்டியில் தங்கம் வென்றார். இதனையடுத்து ஊர் திரும்பிய அவருக்கு, மேளதாளம் முழங்கிட கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.