சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ரூ.90,560 ஆக விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.70 அதிகரித்து, 22 காரட் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.11,320 ஆக விற்பனை ஆனது. இன்று காலையில், ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்த நிலையில், பிற்பகலிலும், ஒரு சவரனுக்கு ரூ.560 ரூபாய் அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.11,250-க்கும், ஒரு சவரனுக்கு (8 கிராம்) ரூ.560 உயர்ந்து ரூ.90,000 ஆகவும் விற்பனை ஆன நிலையில், பிற்பகலிலும் தங்கத்தின் விலை அதிகரித்தது. சர்வதேச பொருளாதார நிலவரம், டாலர் மதிப்பு, பங்குச் சந்தை போக்கு ஆகியவற்றைப் பொறுத்து, இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை காண்கிறது.கடந்த சில மாதங்களாக தங்கம் தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது.நேற்று (நவம்பர் 5) ஒரு கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.11,180-க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.89,440-க்கும் விற்பனையானது. இன்று (நவம்பர் 6) மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.