ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் குருபூஜையை ஒட்டி முத்துராமலிங்கத் தேவருக்கு அணிவிக்கப்பட்ட தங்க கவசம் மீண்டும் மதுரையில் உள்ள வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது. முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு கடந்த 25-ம் தேதி வங்கியில் இருந்து அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நினைவாலயம் சார்பில் பெறப்பட்ட தங்க கவசம் முத்துராமலிங்கத் தேவருக்கு அணிவிக்கப்பட்டது. இந்நிலையில் குருபூஜை முடிந்ததால் நினைவிடத்தில் பூஜைகள் செய்து தங்க கவசம் அகற்றப்பட்டு போலீசார் பாதுகாப்புடன் வங்கியில் ஒப்படைக்கப்பட்டது.