போகசக்தி பஞ்சலோக அம்மன் சிலை நியூயார்க் தொல்பொருள் ஏலக்கூடத்தில் ஒன்பது கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட உள்ள நிலையில் மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக சிலை தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் கூறினார். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அமைந்துள்ள மச்சபுரீஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்த அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை கூறினார். மேலும் தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் காணாமல் போன சாமி சிலைகளை மீட்பதற்கு சட்ட ரீதியான முயற்சியை மேற்கொள்ள இருப்பதாக கூறினார்.