சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு காஞ்சி காமாட்சி அம்மன் பட்டாடை அணிந்து கையில் வீணையுடன் சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் மற்றும் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு, காமாட்சி அம்மன் வெண்பட்டு உடுத்தி சிறப்பு மலர் அலங்காரத்தில் கையில் வீணையுடன், லட்சுமி சரஸ்வதி தேவியர்களுடன் பல்லாக்கில் எழுந்தருளி நவராத்திரி கொலு மண்டபத்திற்கு வந்தடைய, அங்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.