ரம்ஜான் எனப்படும் ஈகை பெருநாள் இன்னும் சில தினங்களில் வருவதை ஒட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ஆடு விற்பனை களை கட்டியது. சந்தை தொடங்கிய இரண்டு மணி நேரத்தில் 3 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள், மகிழ்ச்சி அடைந்தனர். வாரம் தோறும் புதன்கிழமை நடக்கும் இந்த சந்தைக்கு தியாகதுருவம், திருக்கோவிலூர், ஆசனூர், மடப்பட்டு,சேந்தநாடு, குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். வெள்ளாடு, செம்மறி ஆடு, குரும்பாடு என ரகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆடும் ரூபாய் 8000 ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது.