கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் ஒரு ஆட்டை நான்கு நாய்கள் ஒன்று சேர்ந்து துரத்தி துரத்தி கடித்துக் குதறும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சுக்கான் குழி பகுதியில் நான்கு நாய்கள் கடித்து குதறியதில், சதாம் என்பவரின் ஆடு பரிதாபமாக உயிரிழந்தது.