மகாசிவராத்திரியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஆடு, கோழியின் விலை கிடுகிடுவென உயர்ந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். மானாமதுரை அருகே திருப்புவனம் கால்நடை சந்தையில் சிவராத்திரிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் ஆடு மற்றும் கோழிகளை வாங்க குவிந்ததால், 10 கிலோ எடை கொண்ட ஆடு 13 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது. விலை உயர்வால் சுமார் மூன்று கோடி வரை விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.