உயர்கல்வியில் தமிழ்நாடு இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு போட்டி போடுவதைவிட, உலகளவில் போட்டியிட வேண்டும் என்பதே முதலமைச்சரின் விருப்பம் என்று அமைச்சர் கோவி செழியன் தெரிவித்தார். தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ் என அழைக்கப்படும் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய அவர், இந்திய அளவில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் தமிழகத்தில்தான் அதிகம் என்று பெருமைபட கூறினார்.