புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் ரவுடிக்கு அறிவுரை வழங்கியதற்காக , அறிவுரை கூறியவரையும், அவரது இரண்டு மகன்களையும் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்பேத்கர் நகரைச் சேர்ந்த நாடிமுத்து அதே பகுதியில் வசித்து வந்த பிரபல ரவுடியான மணிகண்டன் என்கின்ற ப்ளேடு மணி என்பவரை ஏன் இவ்வாறு ரவுடிசம் செய்கிறாய், நமது பகுதி இளைஞர்கள் இவ்வாறு செய்வது தவறு என்று அறிவுரை கூறியுள்ளார்.இதனால் அவர்மீது கடும் கோபத்தில் இருந்த பிளேடு மணி இரவு அவரது நண்பர்களை அழைத்துக்கொண்டு சென்று நாடிமுத்துவை உருட்டுக்கட்டை மற்றும் கல்லால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அவரது இரண்டு மகன்களையும் மடக்கி கொலை வெறித்தாக்குதலில் ஈடுப்பட்டனர்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி காவல் துறையினர், ப்ளேடு மணி மற்றும் அவரது கும்பலைத் தேடி வருகின்றனர். பிரபல ரவுடியான ப்ளேடு மணி மீது மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.