சென்னை மாதவரத்தில் உடன்பிறந்த தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சகோதரன் மற்றும் தாயின் 2 வது கணவர் மற்றும் உடந்தையாக இருந்த தாயையும் போலீசார் கைது செய்தனர். சென்னை மாதவரத்தை சேர்ந்த இந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரிடம் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து கூறியுள்ளார். அவர் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த மாதவரம் காவல்துறையினர் சிறுமியை மீட்டு 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் போதையில் குடும்பத்தினர் தொடர் பாலியல் தொல்லை அளித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.