கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டு, வேறுபெண்ணை திருமணம் செய்ததாக காதலன் வீட்டு முன்பு காதலி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்த போது, பூராண்ட்பாளையம் பகுதியைச் சேர்ந்த பரணி குமார் என்பவரை 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். அப்போது கர்ப்பமான நிலையில் கருக்கலைப்பு செய்ததாகவும், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.